நீங்கள் சைவமாக மாறுவதே முதல் கர்ம நிவாரண பிள்ளையார்சுழி
*****************************************************************************************************
குரு சொல்லி தருவதை தட்டாமல் ஜெபிக்க வேண்டும் நல்ல வார்த்தை சொல்லும் கொடியோராயினும் அவரும் குருவே இறை மார்க்கத்தில் செல்லுவோருக்கு.உனக்கு உபதேசிக்கின்ற குரு உன் வடிவில் உன் சிந்தனைகளின் வடிவில் கூட இருப்பான்.ஏன் பதிவு செய்த என் வடிவில் கூட இருப்பான்.என்னை ஆய்வு செய்யாதே உனக்கு தேவையானதை பெற்று கொண்டு ஒரு ஓரமாக சென்று உருபோடும் வேலையை ஆரம்பி.மச்சேந்திர முநிவரை அறிவீர்களா ஆன்மாக்களே அவர் சீடன் கோரக்கர் பெற்று வந்த வடையை உண்டு பார்த்துவிட்டு மீண்டும் கேட்டார்.
ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை
கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை
கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார்.கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார்.
ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார்.
இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர்
குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை
அடைந்தார். மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது
இருப்பிடத்திற்குச் செல்வோம் என்று அழைத்தார்.
இவர்களுக்கு வழிசெலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக்
கட்டியை பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார்.
இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள்
பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். இதனை கவனித்த
கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை
எடுத்து வெளியே எரிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கல்லை வைத்தார்.
மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த
பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
கோரக்கர் மீது கோபம் கொண்டார்.
“அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு
சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப்
படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த
மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை
எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது.
மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப்
பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய
சித்திகளையும் பெற்றார்.
இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு போக்கு ஒரு பொறு வகையான் கர்மாஉனக்கான் விடுதலையி அந்த பிரம்மம் என் மூலம் கருவியாக்கி உனக்கு உபதேசிக்கிறது.எனக்கு ஏதேனும் தேவை என்றால் அதை உனார்த்த உன் மூலமோ அல்லது வேறொருவர் மூலமோ அதை சொல்லித்தரலாம் .சொல்பவனை விடு சொல்லை கவனி
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச்
சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது
மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்
காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போதுபூணவே
கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வதைகள்
கோவதைகள் செய்தபாவம்ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.
காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலேகாலறிந்து யோகமதால்
அங்லங்கென்றுநேரப்பா நிலையறிந்து நிலையில்நின்றுநீ மகனே நூற்றெட்டு
உருவேசெய்தால்வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்வெகுகோடி பாவமெல்லாம்
விலக
-அகத்தியர் பரிபூரணம் 1200பொருள்:
பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள், நீங்கள் கருணை
உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும்
செய்யாதிருந்தபோதிலும் உங்கள் வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல்
போவதும்( கண்ணாரக் கண்டபாவம்), தீய சொற்களையும், தீயவர்களின்
வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை கேட்பது(காதாரக் கேட்டபாவம்) உங்கள்
மனமகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்)
பெண்களை கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது ஓரறிவு முதல் ஆரறிவு
வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின் முன்னோர்கள் செய்த பாவமென
எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு
சூட்சம மந்திரத்தைசொல்கிறேன் கேளுங்கள்.
உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து (இன்றைய நிலையில்
அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு
திசை நோக்கி அமர்ந்துகொண்டு மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து
அடக்கிக்கொண்டு மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற
மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால்
உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி
விடும் என்கிறார் அகத்திய மாமுனிவர்.
நல்ல விஷயங்களை முறைப்படி உபதேசம் பெற்று பொறுமையுடன் உத்தமன் திருவடி போற்றி நலமுடன் பலமுடன் வளமுடன் வாழுங்கள்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.